மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தென்காசி பாராளுமன்ற உறுப்பினரும் திஷா குழு தலைவியுமான ராணி ஸ்ரீகுமார் தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் முன்னிலை வகித்தார். கூட்டத்தின் போது இந்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் தேசிய சுகாதார இயக்கம் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் தூய்மை பாரத இயக்கம் தேசிய நில ஆவணங்கள் கணினி மயமாக்கல் பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி வளர்ச்சி திட்டங்கள் வனத்துறை மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பேசிய ராணி ஸ்ரீகுமார் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலன் கருதி விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து மக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் தீட்டி செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொன்டார். இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி நாடார், சதன் திருமலை குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்செல்வி, மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் உட்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



