நாகர்கோவில் அக் 28
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, ஏ ஐ எம்கே, மதுபோதை விழிப்புணர்வு பேரணியை
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட பிரதிநிதியும் உயர் நீதி மன்ற வழக்கறிஞர் பழனி கணபதி பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுதா வசந்தகுமார், குமரி வீல் செயர் அறக்கட்டளை ஆலோசகர் வசந்தகுமார் , ஜேக்கப் பாராமெடிக்கல் கல்லுாரி டாக்டர். ரவி, சினேகம் பெற்றோர் இல்ல நிறுவனத் தலைவர் லதா கலைவாணன் உட்பட கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி பெண்கள் கிருஸ்த்தவ கல்லூரி சாலை வழியாக , வடசேரி சந்திப்பு வழியாக புத்தேரியில் சென்று முடிவடைந்தது.