திண்டுக்கல் ஸ்ரீ அறக்கட்டளையின் நிறுவனர் ஆர். ஆனந்தி அவர்களுக்கு சிறந்த நட்சத்திர சாதனையாளர் விருது.
திண்டுக்கல்லில் அனைத்து துறை சாதனையாளர்களுக்கும் நட்சத்திர சாதனையாளர்கள் விருது – 2025 நிகழ்ச்சி திண்டுக்கல் ரவுண்டு ரோடு நாயுடு மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல்லில் உள்ள ஏழை, எளிய பெண்களுக்கு சுய வேலை வாய்ப்பு மற்றும் பெண்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சமூக சேவைகளை சிறப்பாக செய்தமையை பாராட்டி திண்டுக்கல்லில் ஆர்.ஆனந்தி அவர்களுக்கு சிறந்த நட்சத்திர சாதனையாளர் விருதினை திரைப்பட நடிகைகள் அகிலா, ரதிப்பிரியா ஆகியோர் இணைந்து விருது, பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கினார்கள்