திண்டுக்கல், செப்டம்பர் 29
திண்டுக்கல் பேரண்டிங் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் மதர்லேண்ட் கிரானைட் அண்ட் டைல்ஸ் இணைந்து திண்டுக்கல் ஆர்ட் திருவிழா இது நம்ம ஊர் திருவிழா என்ற கலைத் திருவிழாவின் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பிரதீப் கலந்து கொண்டார். முதல்வர் சௌந்தரபாண்டியன் மற்றும் மணிகண்டன், காமராஜர் வித்யாலயா பள்ளி சிறப்புரையாற்றினர். மதர்லேண்ட் கிரானைட்ஸ் மற்றும் டைல்ஸ் நிறுவனர் ஐ.பு.விவேக் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமிருந்து விருதை பெற்றுக் கொண்டார். இத்திருவிழாவில் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல போட்டிகள் நடைபெற்றன போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அவர்களது திறமையை மேம்படுத்தும் விதமாக இரண்டு நாள் பயிற்சி பட்டறை வகுப்புகளும் வழங்கப்படுகின்றன.