ஈரோடு மே 11
12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி பெற கல்லூரி செல்ல உள்ள மாணவர்களுக்கு உயர்கல்விக்கான பல்வேறு வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும் போது தேர்வு செய்யும் முறைகள் கல்வி கடன் பெறுவதற்கான வழிமுறைகள் மாணவர்களுக்கான தனிநபர் கவுன்சிலிங் உள்ளிட்ட விரிவான வழிகாட்டல்களை வழங்க கல்லூரிக் கனவு என்ற வழிகாட்டல் நிகழ்ச்சி ஈரோடு மாவட்டம் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மருத்துவம் பொறியியல் கலை மற்றும் அறிவியல் பாலிடெக்னிக் ஐ.டி.ஐ என 40 க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள படிப்புகள் குறித்து அரங்குகள் அமைக்கப்பட்டு கல்லூரி பேராசிரியர்களால் வழிகாட்டல்கள் வழங்கப்பட உள்ளது. உயர்கல்வி பயில கல்வி கடன் பெறும் வழிகள் குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டல் வழங்கப்பட உள்ளது. இத்துடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு கல்லூரி கணவு வழிகாட்டல் கையேடு வழங்கப்பட உள்ளது. மாலை வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கவும் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் 12 ம் வகுப்பு முடித்து கல்லூரி செல்ல உள்ள மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.