தருமபுரி, டிசம்பர் 08 –
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் மடம் கிராமத்தில் 600 – க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சிறு சிறு தெருக்கள் உள்ளன. இந்த தெருக்கள் அனைத்திலும் வட்டார வளர்ச்சி துறை சார்பில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாளடைவில் இப்பகுதியில் உள்ளவர்கள் சாலையை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளனர் . இது மட்டுமல்லாமல் அவசர காலங்களில் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டவர்களை அவசர தேவைக்கு அழைத்துச் செல்ல கூட ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு தெருக்களின் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது.
இதனால் கிராம மக்கள் பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், மாவட்ட நிர்வாகத்திடமும், பஞ்சாயத்து நிர்வாகத்திடமும் இதுகுறித்து புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுகின்றனர். இப்பகுதி மக்கள் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.



