தருமபுரி, டிசம்பர் 16 –
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சேலம் நோக்கி சென்ற லாரி முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மற்றும் ஆம்னி கார் மீது மோதியதில் தம்மணம்பட்டியை சேர்ந்த அருணாகிரி, மாதேமங்கலத்தை சேர்ந்த கலையரசி மற்றும் சங்கரிரியை சேர்ந்த முனியப்பன், தினேஷ் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தை பற்றி தகவல் அறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் மற்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
கோவை ஐ ஜி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதேஸ்வரன், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரிதரன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி , வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவ்ராஜ், இந்திய தேசிய நெடுஞ்சாலை குழு தலைவர் ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொப்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



