திருவாரூர்
ஏப்ரல் 12
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன்,நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், கோவில்வெண்ணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதுவதனை பார்வையிட்டு, அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளிடம் உணவு தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்கள்.
அதனைத்தொடர்ந்து, கோவில்வெண்ணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.66.70 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்டுவரும் மூன்று புதிய வகுப்பறை கட்டடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவில்வெண்ணி ஊராட்சி ஒன்றிய அரசு உயர்நிலைப்பள்ளி சமையல் கூடத்தில் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் உணவு தரம் குறித்தும், மாணவ, மாணவியர்களின் கழிவறை தூய்மை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
கோவில்வெண்ணி ஊராட்சி, தெற்குதெரு கிராமத்தில், ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலைஞர் கனவு இல்லத்தினையும், சோணாப்பேட்டை ஊராட்சியில், வட்டார நாற்றாங்கால்; மேற்கூரை அமைத்து நடவு செய்யப்பட்டுள்ளதனையும், நீடாமங்கலம் ஒன்றியம், பூவனூர் ஊராட்சி, சம்பா வெளி மாதா கோவில் தெருவில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளால் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீடுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இவ்ஆய்வில், நீடாமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், துணை வட்டாட்சியர் அறிவழகன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மாலதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.