தேனி பிப்ரவரி 12
மதுரை-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் இரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் 16.02.2025 முதல் வாகனஓட்டிகள் மாற்றுப்பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேனி மாவட்டம், தேனி-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் இரயில்வே கடவு எண் 68-ன் குறுக்கே, இரயில்வே மேம்பாலப்பணிகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி 16.02.2025 (ஞாயிற்றுக்கிழமை) முதல் போக்குவரத்து வழித்தடம் மாற்றப்படுகிறது.
மதுரையிலிருந்து தேனி செல்லும் வாகனங்கள்:
தற்போது உள்ள மதுரை – கொச்சின் சாலையில் நேரடியாக, தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் முதல் இரயில்வே கேட் வரை ஒருவழி பாதையில் செல்ல வேண்டும்.
தேனியிலிருந்து மதுரை செல்லும் வாகனங்கள்:
இரயில்வே கேட் கடந்து இடது புறம் புறவழிச்சாலை சென்று, புதிய பேருந்து நிலையத்திலிருந்து, தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகில் உள்ள திட்டச்சாலை வழியாக மதுரை – கொச்சின் சாலையில் செல்ல வேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ள மாற்றுப் பாதையினை பயன்படுத்தி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இரயில்வே மேம்பாலப்பணிகள் மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி