நாகர்கோவில் ஜன 24
இந்திய பல் மருத்துவ சங்கம் கன்னியாகுமரி கிளை மற்றும் கார்மல் பள்ளியின் முன்னாள் மாணவர் இயக்கம் இணைந்து நடத்திய பல் மருத்துவ முகாம் கார்மல் பள்ளியில் நடைபெற்றது. நடைபெற்ற பல் மருத்துவ முகாமில் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை வின்சென்ட் அமல் ராஜ் மற்றும் தலைமை ஆசிரியர் அருட்தந்தை மரிய பாஸ்டின் துரை ஆகியோர் துவங்கி வைத்தனர். விழாவில் இந்திய பல் மருத்துவ சங்கம் கன்னியாகுமரி கிளையின் தலைவர் மருத்துவர் ஜேசன் ராய், செயலாளர் மருத்துவர் பி எல் பெரில் தலைமையில் மரு. அருண்குமார், மரு பெசன் ஜாஸ், மரு. பிரான்சிஸ் சேவியர், மரு ஜெயகுமார், மரு. அபிஷா ராஜ்குமார், மரு பாத்திமா, மரு ஆண்ட்ரூ, மரு சூசன் ராய் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் முகாமில் சுமார் 1000 மாணவர்கள் பயன் பெற்றனர்.முகாம் ஏற்பாட்டினை மாணவர் இயக்க நிர்வாகிகள் பால்குவின் புருஸ், ஜான் உபால்ட், ரெக்ஸ், அருள் ராஜன், மகிபன் , அமல்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.