ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
மாவட்டத் தலைவர் முருகன் தலைமை வகித்தார்
ராமநாதபுரம், ஆக.22-
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஒற்றை கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் முருகன் தலைமை வைத்தார். மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், பொருளாளர் சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் தூத்துக்குடி வேல்முருகன் மாநில இணை செயலாளர் கமுதி ஜெயபாரதன் மாநில மகளிர் அணி இணைசெயலாளர் செந்தாமரை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர்.
மாவட்ட மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, மாவட்ட அமைப்பு செயலாளர் முத்துவழிவிட்டான், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் பாக்யராஜ், இணை துணை நிர்வாகிகள் அனைத்து ஒன்றிய ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.