நாகர்கோவில் ஆக 24
குமரி மாவட்டம் பூதப்பாண்டி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக வழக்கறிஞர் படுகொலையை கண்டித்தும் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை அரசு உடனடியாக இயற்றக்கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் வழக்கறிஞர்களின் படுகொலையை கண்டித்தும் மத்திய மாநில அரசுகள் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற கோரியும் நேற்று பூதப்பாண்டி நீதிமன்றம் முன்பாக நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டதிற்கு துணைத் தலைவர் ஜெரோன் தலைமை வகித்தார். செயலாளர்
சுப்பிரமணிய ராஜன், பொருளாளர் வே. ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில்
இணைச் செயலாளர் சாம்ராஜ், நூலகர் முருகன், செயற்குழு உறுப்பினர் ரமேஷ், மூத்த உறுப்பினர்கள் பூதப்பாண்டி வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக இயற்றிட கேட்டு தமிழக அரசை வலியுறுத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..