நாகர்கோவில் ஆக 29
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி மற்றும் பெண்கள் கிறித்தவக் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளுக்கும் பொறுப்பாளர்கள் பதவியேற்பதில் உள்ள சிக்கலினால் மூன்று மாத காலமாக ஊதியம் வழங்காத நிலையை கண்டித்தும் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்னிந்தியத் திருச்சபையால் நிர்வகிக்கப்படும் ஸ்காட் கிறித்தவ கல்லூரி. நேசமணி நினைவு கிறித்தவக் கல்லூரி மற்றும் பெண்கள் கிறித்தவ கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளுக்கும் பொறுப்பாளர்கள் பதவியேற்பதில் உள்ள சிக்கலினால் அரசு ஊதியம் வழங்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்லூரி கல்வி இயக்குநர் அவர்களிடம் நேரடி சம்பளம் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அரசும் அதை கண்டு கொள்ளாமல் சம்பளம் வழங்கவில்லை. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஊதியத்தை வழங்கிட கேட்டு மூட்டாவை சார்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் ஆசிரியரல்லாத பணியாளர்களும் மற்றும் தோழமை சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மூட்டா வின் நான்காம் மண்டல தலைவர் பேரா. ஐசக் சோபன ராஜ் தலைமை தாங்கினார். பேரா. ராஜ ஜெயசேகர், பொருளாளர். மத்திய மூட்டா. பேரா. சைலா குமாரி, மூட்டா. மத்திய இணைச் செயலாளர் பென்னட் ஜோஸ், ஒருங்கிணைப்பாளர். குமரிமாவட்ட ஆசிரியர் கூட்டமைப்பு. சுமஹாசன். மாவட்ட செயலாளர். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, வேலவன், தலைவர், பட்டதாரி ஆசிரியர் சங்கம். கோபிநாத் மாநில பொதுச் செயலாளர். TANSAC, பேரா. மனோகர ஜஸ்டஸ். ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் சங்கம் டொமினிக் ராஜ், எட்வின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மூட்டா நான்காம் மண்டல துணைத் தலைவர் பேரா. கணேஷ் நன்றியுரை கூறினார். மூட்டா வின் நான்காம் மண்டல செயலர் பேரா. ஜேம்ஸ் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்து இருந்தார்.



