மயிலாடுதுறையில் திமுக, விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்:-
சட்ட மாமேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாக கூறி அமித்ஷாவை கண்டித்து நாடு முழுவதும் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே கிட்டப்பா அங்காடி முன்பு திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தனித்தனியாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ தலைமையில் 300க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொன்டர்கள் கலந்து கொண்டு அம்பேத்கரை விமர்சித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அதே இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்
மாவட்ட செயலாளர் மோகன்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றி மத்திய அமைச்சருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.