ஈரோடு மார்ச் 6
சத்தியமங்கலம் அருகே உள்ள திம்மையன் புதூரில் 100 ஆண்டுகள் பழமையான முத்து மாரியம்மன் கோவில் இருந்தது. இந்த கோவில் சிமெண்ட் அட்டை மற்றும் தகர மேற்கூரையால் வேயப்பட்டு இருந்தது. இதனால் இந்த கோவிலை கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக காங்கிரீட் கட்டிடம் கட்ட அந்த பகுதி பக்தர்கள் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கினர் . ஆனால் இந்த இடம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில் இடத்தை இடித்து அகற்றும்படி கோர்ட்டு உத்தரவிட்டது இதன்படி ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சத்தியமங்கலம் தாசில்தார் முன்னிலையில் இடித்து அகற்றப்பட்டது.
மேலும் அப்பகுதியில் அரச மரத்தடியில் இருந்த விநாயகர் சிலையும் அகற்றப்பட்டது
இந்த விநாயகர் சிலையும் கோவிலில் இருந்த முத்து மாரியம்மன் சிலையும் பாதுகாப்பாக சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க 100 கற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.