தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்த தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிக்கு அன்றைய தினமே மாற்றுத் திறனாளி கள் நலத்துறையின் சார்பில் மூன்று சக்கர சைக்கிள் மற்றும் ஊன்றுகோலை மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி வழங்கினார். உடன் கூடுதல் ஆட்சியர் கௌரவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, தனித் துணை ஆட்சியர் சுப்பிரமணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சாகுல் ஹமீத் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.



