திருமலைக்கோடி, ஸ்ரீ நாராயணி செவிலியர் கல்லூரியில் தீபம் ஏற்றும் விழா
வேலூர் 14
வேலூர் மாவட்டம் ,வேலூர் திருமலைக்கோடி ஸ்ரீ நாராயணி செவிலியர் கல்லூரியில் செவிலியர் மாணவர்களின் தீபம் ஏற்றும் விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர்கள் கல்லூரியின் முதல்வர் டாக்டர் வி பிரபா ஸ்ரீ நாராயணி குழுமத்தின் இயக்குனர் பேராசிரியர் என் .பாலாஜி ஸ்ரீ நாராயணி கல்வி குழுமம் நிர்வாக இயக்குனர் டாக்டர் பி. மாதவி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தனர் உடன் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் எம் .ரோகிணி தேவி சின்னத்திரை நடிகை கோமதி பிரியா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதலாம் ஆண்டு பயிலும் 100 பட்டப்படிப்பு மற்றும் 40 பட்டய படிப்பு மாணவர்களின் செவிலிய சான்றோர்களிடம் தீபம் ஏற்றிக்கொண்டு உறுதி மொழியை முன்மொழிய செவிலிய மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சி நிறைவாக கூடுதல் துணை முதல்வர் டாக்டர் சுதா நன்றி உரையாற்றினார்.