தக்கலை, ஜன- 14
தக்கலை அருகே கல்குறிச்சியில் புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது. அங்கு பாதிரியாராக இருப்பவர் ஜார்ஜ் பொன்னைய்யா (67). ஆலய பங்கு பணியாளர் இல்லத்தில் தங்கி உள்ளார். நேற்று இரவு சுமார் 8 மணி அங்கு ஒரு கும்பல் நுழைந்து அங்கு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரை அடித்து உடைத்தனர்.
சத்தம் கேட்டு பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வெளியே வந்தார். அப்போது அவரை கம்பியால் தாக்க முயற்சித்தனர். உடனே அவர் உள்ளே தப்பி சென்று விட்டார். பின்னர் பாதிரியாரை கும்பல்கள் கம்பியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றது. இதில் காரின் பின்பக்க கண்ணாடி உடைந்தது.
இந்த சம்பவம் குறித்து பாதிரியார் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தாக்குதல் ஈடுபட்ட கல்குறிச்சி பகுதி ராஜேந்திரன் ராஜு (59) ஏஞ்சல்ஸ் (47) ஜஸ்டின் (45) மற்றும் கண்டால் தெரியும் மூன்று பேர் என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



