தென் தாமரைக்குளம் மார்ச் 23
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் பைப்புகள் உடைந்து காணப்படுவது மட்டுமல்லாமல் குடிநீர் தொட்டிகள் உபயோகமில்லாமல் உள்ளது. இதனால் மாணவ மாணவிகள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பெற்றோர்கள் வீட்டிலிருந்து மாணவர்களுக்கு பாட்டிலில் தண்ணீர் கொடுத்துவிடும் அவலமும் ஏற்பட்டுள்ளது. பள்ளியில் மாணவர்கள் சுத்தமான குடிநீர் பருக மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்விதுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்,அவர்கள் சுத்தமான குடிநீர் பருக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது,ஆனால் குடிநீர் தொட்டியில் குழாய்கள் உடைந்தும், குடிநீர் தொட்டி தண்ணீர் இல்லாமலும் காட்சியளிக்கிறது இதனால் பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்து தண்ணீரை கொண்டு வரும் அவலம் ஏற்பட்டுள்ளது, இது குறித்து தகவல் இருந்த பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர்.செல்வம் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார், அப்போது அங்கு சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் குடிநீர் தொட்டி பயன்பாடு இல்லாமல் இருந்தது கண்டறியப்பட்டது, உடனடியாக தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுத்தனர், அரசு பள்ளியில் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ள சம்பவம் மாணவர்களை பெரிதும் பாதிக்கும்,இந்த கோடை காலத்தில் மிகவும் சிரமம் ஏற்படும் எனவே உடனடியாக பள்ளி மற்றும் மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக மாணவ மாணவியர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,உடனடியாக சேதமான குடிநீர் படைப்புகளை சீரமைக்க வில்லை என்றால் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் எச்சரித்து உள்ளனர்.