திருநெல்வேலி அக்டோபர் 05.
நெல்லையில்
பல்வேறு சிறப்பு பிரிவுகளுடன் முன்னணி மருத்துவமனையாக செயல்பட்டுவரும் அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை, 22 வாரங்கள் கருவில் தாங்கியிருந்த 24 வயதான இப்பெண்ணுக்கு மிக நுட்பமான லேப்ராஸ்கோபி அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது;
அத்துடன் ஒரு பெரிய சிறுநீரக நீர்க்கோவை கட்டியிருந்த செயல்படாத வலது சீறுநீரகமும் இச்செயல்முறையில் அகற்றப்பட்டது. கருவகத்தில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை வளர்ச்சி கண்டுவரும் நீர்க்கட்டியை ஏற்படுத்தி வருவதால் ஒரு அவசரநிலை சிகிச்சையாக இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இச்சிகிச்சையை மேற்கொள்ளப்படவில்லையென்றால் பிரசவத்தின் போது தாய்க்கு உயிருக்கு ஆபத்தான சிக்கல்கள் ஏற்படுவதற்கு அது வழிவகுத்திருக்கும்
கல்லிகுளத்தைச் சேர்ந்தவரான சிஹானா ஷேக் என்ற இப்பெண் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முதன்முறையாக கருத்தரித்தார் மற்றும் இந்த ஆண்டு ஜுன் 3-ஆம் வாரத்தில் பிரசவம் நிகழுமென கணிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் 22 வாரங்கள் கர்ப்பநிலையில் கடுமையான அடிவயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு செய்யப்பட்ட ஸ்கேன் சோதனை, அடிவயிற்றின் வலதுபக்கத்தில் ஒரு பெரிய நீர்க்கட்டி இருப்பதை வெளிப்படுத்தியது. எம்ஆர்ஐ ஸ்கேன் சோதனையும் இதை உறுதிசெய்தது. நோயறிதலுக்கான லேப்ராஸ்கோபி செய்யப்பட்டபோது, சிறுநீரக நீர்க்கோவை கட்டி பெரியளவில் இருப்பது கண்டறியப்பட்டது.
பொது மற்றும் லேப்ராஸ்கோபி அறுவைசிகிச்சைத் துறையின் தலைவர் டாக்டர். அந்தோணி ராஜ் தலைமையிலான அறுவை சிகிச்சை நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளடக்கிய குழு இப்பெண்ணுக்கு இந்த அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
இது தொடர்பாக, டாக்டர். அந்தோணி ராஜ் கூறியதாவது, “கருவுற்ற பெண்களில் பெரியளவிலான சிறுநீரக நீர்க்கோவை கட்டியுடன் கூடிய சிறுநீரகம் காணப்படுவது அரிதானது. கருவுற்ற பெண்களில் சுமார் 5% நபர்களிடமே இது உருவாகிறது. பாதிக்கப்பட்ட சிறுநீரகத்துடன் இந்த நீர்க்கட்டியை அகற்றுவது உடனடியாக செய்யப்பட வேண்டியிருந்தது. எனினும், கருவகத்தில் வளரும் குழந்தையின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளும்போது, இந்த அறுவைசிகிச்சை அதிக சவாலானதாக இருக்கக்கூடும் லேப்ராஸ்கோபி செயல்முறைகளில் எமது நிபுணத்துவம், மேம்பட்ட நவீன கட்டமைப்பு வசதிகள் மற்றும் உயர்நிலை தொழில்நுட்பம் ஆகியவற்றின் காரணமாக எமது மருத்துவமனையில் இந்த அறுவைசிகிச்சையை எங்களால் வெற்றிகரமாக செய்ய முடிந்தது
என்று கூறினார்.


