அரியலூர், மே 27.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மே 30 முதல் மாணவ,மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்குகிறது என்று அக்கல்லூரியின் முதல்வர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்..
ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டிற்கான இளங்கலை மற்றும் இளமறிவியல் மாணவ,மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மே 30 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
முதல் நாளில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தேசிய மாணவர் படை வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடைபெறுகிறது.
மாணவ, மாணவியர் கலந்தாய்வுக்கு குறித்த நேரத்துக்கு 30 நிமிடத்துக்கு முன்னதாக கட்டாயம் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவருடன் வருகை தரவேண்டும்.
கலந்தாய்வுக்கு வரும் போது 10 மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டுக்கான உரிய சான்றிதழ், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்கள்-2, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-4, வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் – 2 ஆகிய அனைத்து சான்றிதழ்களும் அசல் மற்றும் நகல்கள் எடுத்து வரவேண்டும்.
சிறப்பு ஒதுக்கீட்டுக் கலந்தாய்வில் கலந்த கொள்ள அதற்கான சான்றிதழ்கள்,
இணையத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (அனைத்து பக்கங்கள்) 2 நகல்கள் கட்டாயம் எடுத்து வரவேணடும்.
கல்விக் கட்டணம் முழுவதும் செலுத்திய பின்பே சேர்க்கை முழுமையடையும். விண்ணப்பித்தவர்களின் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதளமான www.gascjayankondam.ac.in என்ற இணையதளத்தில் 28.05.2024 முதல் காணலாம்.
முதல் கட்ட இரண்டாம் சுற்று பொதுக் கலந்தாய்வு 24.06.2024 முதல் 29.06.2024 வரை நடைபெறும். முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் 03.07.2024 அன்று தொடங்கும். தரவரிசைப்பட்டியின் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்படும் அல்லது குறுஞ்செய்தி, கட்ச்செவி மூலமாக குறுஞ்செய்தி அனுப்பப்படும் .