கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட தனியார் மஹாலில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நியோ போல்ட் வீல்சேர் மற்றும் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் ஆகியவைகளை வழங்கினார். உடன் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன் 18 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி ராமதாஸ் பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் (மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்) பிரியா உதயகுமார் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.



