வேலூர்=14
வேலூர் மாவட்டம் ,வேலூர் சதுப்பேரி கே. ஹெச் .எக்ஸ்போர்ட் ஷீ கம்பெனி அருகில் மக்களை தேடி இயன்முறை திட்டத்தில் மீனாட்சி இயன்முறை மருத்துவ கல்லூரி சார்பில் இலவச இயன்முறை (physiotherapy) மருத்துவ முகாம் மீனாட்சி இயன்முறை மருத்துவ கல்லூரி முதல்வர் ர. பார்த்தசாரதி வழிகாட்டுதலின்படி நடைபெற்றது இம்முகாமில் கழுத்து வலி, தோள்பட்டை வலி ,முதுகு வலி, கை, கால் வலி, தசை பிடிப்பு, பக்கவாதம், நரம்பு இழுத்தல், தண்டுவட பாதிப்புகள், ஆகியவற்றுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டு ஆலோசனைகளும் பயிற்சிகளும் வழங்கினர். உடன் முகாம் ஒருங்கிணைப்பாளர் இயன்முறை பேராசிரியர் ஹரிஹர சுப்பிரமணியன், மற்றும் மருத்துவ கல்லூரி மாணவிகள் நிவேதா ,ஸமீரா, நஃபீஸா ஷேக், ஃபாத்திமா அமின், ஃபர்ஹாத் ஃபாத்திமா, லினீ ஹன்னா ஜீஹி, ஷெஹனாஷ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.