தொடர் மழை – காணாமல் போனதற்காலிக பாலம் _ பூதப்பாண்டி – மே – 30-பூதப்பாண்டி யை அடுத்துள்ளஅருமநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு பகுதியில் பழையாறு அமைந்துள்ளது,இந்த பழையாற்றின் வடக்கு பகுதியில் மறுகரையில் தடிக்காரன் கோணம் செல்ல காங்கிரிட்டால் ஆன பழமையான கம்பி பாலம் (சுமார் 4 அடி வீதியில் 18 அடி நீளத்தில்) அமைந்திருந்தது. இதில் இரு சக்கரத்தில் ஒருவர் மட்டுமே செல்ல முடியும் மேலும் பாலம் பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் இருந்தது அதனை டெம்போக்கள்செல்லும் அளவில் வீதியாக மாற்றி புதிய பாலம் கட்டி தரவேண்டி அப்பகுதி மக்கள் பால்வளத்துறை அமைச்சர்மனோ தங்கராஜிடம்கோரிக்கை வைத்தனர் அதன்காரணமாக சுமார் 44 லட்சத்தில் 12 அடி வீதியில் பழையாற்றின் குறுக்கே புதியபாலம் கட்டி முடிக்க தமிழக முதலமைச்சர் அவர்களால் கடந்த மார்ச்மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் இதனை தொடர்ந்து பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர் மூலம் ஆற்றின் குறுக்கே இருந்த குறுகிய கம்பி பாலம் இடிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. மேலும் இருசக்கர வாகனம் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல நடைபாதை அமைத்து கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாகபெய்து வரும் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மழைநீர் பழையாறு வழியாக அதிக அளவில் வருவதினால் அருமநல்லூர் பகுதியில் உள்ள பழையாற்றின் குறுக்கே அமைத்தநடைபாதை தண்ணீரில் அடித்து சென்றது இதனால் பொதுமக்கள் மறு கரை வழியாக தடிக்காரன் கோணம் பகுதிக்கு செல்ல முடியாமல் பரி தவித்து வருகின்றனர். மேலும் இவர்கள் அருமநல்லூரில் இருந்து தடிக்காரன் கோணம் செல்ல சுருளோடு வழியாக அல்லது தெரிசனங்கோப்பு வழியாக சுமார் 12 கிலோ மீட்டர்தூரம் சென்று தான் செல்ல முடியும். இதனால் தினசரி விவசாய கூலி தொழிலாளிகள் பணிகளுக்கு செல்ல சிரமபட்டு வருகின்றனர். மேலும் வருகிற ஜூன் இரண்டாம்தேதி அனைத்து பள்ளி கூடங்களும் திறக்க உள்ள நிலையில் தடிக்காரன் கோணம், இந்திரா நகர், பகுதி ஏழை குழந்தைகள் சுமார் 100 பேர்கள் அருமநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்து செல்ல சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், மாவட்ட பொதுப்பணி துறையும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி பழையாற்றின் குறுக்கே தற்காலிகமாக இரும்பு கம்பி பாலம் அமைத்து கொடுக்க ஒப்பந்ததாரர் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரி ஒருவரிடம் கேட்கும் போது இந்த வேலை தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் ஒரு வேலையாகும் ஒப்பந்த முறைப்படி செய்யும் பணிகளுக்கு மாற்று பாதைக்கு என நிதி ஒதுக்குவது வழக்கம் இது அவ்வாறு இல்லை என்றும் மக்கள் பயன்பாட்டிற்க்காக மாற்று வழி பாதையை அமைக்க வேறு வழிவகைகள் செய்வார்கள் என்று கூறினார்



