மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு மங்கைநல்லூர் பகுதியில் திமுக பொறுப்பாளர்களுடன் திறந்த வாகனத்தில் சென்று காங்கிரஸ் எம்.பி சுதா நன்றி தெரிவித்தார்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் ஆர்.சுதா 2,71,183 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி குத்தாலம் கிழக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட இடங்களில் திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன், மாவட்ட குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், திமுக ஒன்றிய செயலாளர் மங்கைசங்கர் மற்றும் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட எலந்தங்குடி, கிளியனூர், பெருஞ்சேரி, பெரம்பூர், சேத்தூர், மங்கைநல்லூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் அவர் நன்றி தெரிவித்தார். அப்போது இந்தியா கூட்டணி நிர்வாகிகள் வழியில் அவருக்கு ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.