மயிலாடுதுறையில் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு வாழ்த்து.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 10443 மாணவ-மாணவிகள் இந்த தேர்வினை எழுதுகின்றனர். நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பட்டமங்கல தெருவில் உள்ளஸ்ரீ ஓம் வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான எழுதுபொருள் வழங்கப்பட்டன.
தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் குட்டிகோபிநாத் தலைமையில் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல் அடங்கிய எழுது பொருள்களையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இதில் நகரப் பொறுப்பாளர் ராஜ்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் அறிவரசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரம்யா, ஜாஸ்மின், நகர பொறுப்பாளர்கள் பிரபஞ்சன், குமார், பிரபு, ஹரி, சுரேஷ், சிக்கந்தர் மணி, மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.