சிவகங்கை, மே 01
சிவகங்கை மாவட்ட திமுகவில் நிர்வாக வசதிக்காக சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம் ஏற்கனவே தலா இரண்டு ஒன்றியக்கழகங்களாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு தயாராகிடும் வகையில் மூன்று ஒன்றியக்கழகங்களாக பிரித்து அதற்கான பொறுப்பாளர்களை திமுக அறிவித்தது.
அதன்படி முறையே சிவகங்கை வடக்கு ஆ. முத்துராமலிங்கம் , தெற்கு ம.
ஜெயராமன், மேற்கு பெ. மந்தக்காளை ஆகியோரையும், மானாமதுரையில் ஏற்கனவே இருந்த கிழக்கு துரை. இராஜாமணி , மேற்கு வழக்கறிஞர் ம. அண்ணாத்துரை, வடக்கு புதிய பொறுப்பாளராக அ. முத்துச்சாமி , அதேபோல் திருப்புவனத்தில் ஏற்கனவே மேற்கு வசந்தி சேங்கைமாறன் , கிழக்கு ஏனாதி கடம்பசாமி , தெற்கு புதிய பொறுப்பாளராக பழையனூர் முன்னாள் ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் ஆகியோரை அறிவித்திருந்தது. புதிய பொறுப்பாளர்களை கழக நிர்வாகிகள் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதனிடையே சிவகங்கை தெற்கு ஒன்றிய பொருளாளர், அரசு ஒப்பந்ததாரர் ஏ. ஆர்.உசிலம்பட்டி பாண்டியராஜா நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளை தெரிவித்தார். அவருடன் முன்னாள் ஒன்றிய சேர்மன் மாவட்ட பிரதிநிதி தமறாக்கி தெக்கூர் முத்துராமலிங்கம் அம்பலம், இலுப்பக்குடி கிளைச்செயலாளர் திருஞாணம் , ஏஆர். உசிலம்பட்டி காலனி கிளைச்செயலாளர் தீர்த்தம், ஒன்றிய மேனாள் மாணவரணி அமைப்பாளர் முடிகண்டம் ஆனந்தக்குமார் சிவமூர்த்தி , ஐடி விங் தமறாக்கி அம்பலம், மாணவரணி திரவியம், உள்ளிட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.