கன்னியாகுமரி பிப் 18
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அடுத்துள்ள பால்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சரோஜா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கேரளா மாநிலம் கொச்சி பன்னாட்டு மென்பொருள் நிறுவன மென்பொருள் பொறியாளர் பிரதிபா சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்தக் கருத்தரங்கில் கணினி பயன்பாட்டில் துறையின் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் பிரதீஷ், இணை ஒருங்கிணைப்பாளர் வினுராஜன், அமைப்புச் செயலாளர் முனைவர் பெனடிக்ட் ஜோஸ் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவ பிரதிநிதிகள் செய்திருந்தனர்.