ஸ்ரீவில்லிபுத்தூர்
கலசலிங்கம் பல்கலையில் சிஎஸ்இ துறை சார்பில் ”கணினி மென்பொருள் திறன் மாணவர் குழு” (சாப்ட் கம்ப்யுட்டிங் ரிசர்ச் சொசைட்டி – எஸ்இஆர்எஸ்) துவக்க விழா மற்றும் 12 மணிநேர தொடர் கணினி புராஜக்ட் போட்டிகளும் துணைத்தலைவர் முனைவர் எஸ். சசி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
துணைவேந்தர் முனைவர் எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன், டீன் முனைவர் பி. தீபலட்சுமி, துறைத்தலைவர் முனைவர் என். சுரேஷ்குமார், பேராசிரியை முனைவர் ஜெயலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பேராசிரியை முனைவர் ஆர். முருகேஸ்வரி வரவேற்று, குழு செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார்.
கேகதான் போட்டியில் 65 குழுக்களாக மொத்தம் 250 மாணவர்கள் 12 மணி நேரம் தொடர்ந்து கணினி மென்பொருள் புராஜக்ட்களை செய்தனர். போட்டியில் வெற்றி பெற்ற நான்கு மாணவர்களுக்கு ஊதியத்துடன் கம்பெனியில் பயிற்சிக்குரிய ஆணைகளை சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர்.
பேராசிரியர்கள் ஜே. லயோலா ஜாஸ்மின், எஸ். சுஜிதா, எஸ்.பால
கிருஷ்ணன், எம். விஜய் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
மாணவர் யோகித் ரெட்டி நன்றி கூறினார்.