வேலூர் 25
வள்ளல் மீடியா youtube சேனலில் உலக பேரறிவாளர் அம்பேத்கர் அவர்களைப் பற்றி ஆதாரம் இல்லாத உண்மைக்கு புறம்பான பல பொய்களை பரப்பி உள்ளனர். இத்தகைய காணொளியை பலர் பார்த்துள்ளனர். இத்தகைய செய்தி நாட்டில் சமூக கலவரத்தை ஏற்படுத்தும் வண்ணம் மற்றும் அம்பேத்கரின் மீது வேண்டுமென்றே பழி சுமத்தி அவரை சாதி ரீதியான தலைவர் என பொய் பேசி வெளியிட்டுள்ளனர் அதில் பாரிசாலன் பேசிய அனைத்து கருத்தும் ஆதாரம் அற்றவையாகும் ஆகவே இது போன்ற தகவல்கள் ஒரு தேசிய தலைவரை அவமதிக்கும் விதமாகவும் அவரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாகவும் உள்ளது. எனவே காவல்துறை கண்காணிப்பாளர் இந்த வள்ளல் மீடியா youtube சேனலை தடை செய்தும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாரிசாலன் என்பவரை கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய குடியரசு கட்சி சார்பில் வேலூர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் இந்திய குடியரசு கட்சி மண்டல செயலாளர் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது. உடன் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் மாவட்ட துணைத் தலைவர் மது மாவட்ட இணைச் செயலாளர் சின்னப்பதாஸ் மாவட்ட இளைஞரணி மணிகண்டன் வேலூர் மாநகர செயலாளர் சக்திவேல் ஒன்றிய செயலாளர் ஜெய் மற்றும் பலர் உடன் இருந்தனர்.