மதுரை பிப்ரவரி 23,
மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலாத்தூர் பி.ஆர். மஹாலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வளையல் மற்றும் சீர்வரிசை பொருட்களை வழங்கினார். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் ஆகியோர் உடன் உள்ளார்.