மார்த்தாண்டம், மே – 15.
கோதையாறு அருகே மோதிரமலை பகுதியை சார்ந்த தொழிலாளிக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளார்கள். மூத்த மகள் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் சம்பவ தினம். கல்லூரிக்கு செல்லாமல் விடுதியில் இருந்துள்ளார். மதியம் கல்லூரிக்கு செல்வதாக விடுதி காப்பாளரிடம் கூறிவிட்டு பின்னர் வகுப்புக்கு செல்லவில்லை.
இது குறித்து பெற்றோருக்கு புகார் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவியின் தந்தை குலசேகரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி ஒரு வாலிபருடன் ஆட்டோவில் சென்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக போலீசார் விசாரித்ததில் அந்த வாலிபர் மாணவியியை காதலித்து வந்ததும், அவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கோகுல் என்பதும் கடந்த ஆண்டு கோதை ஆறு பகுதிக்கு சுற்றுலா வந்த போது மாணவியிடம் பழக்கம் ஏற்பட்டு காதல் ஏற்பட்டதும் தெரிய வந்தது. இருவரும் எங்கு சென்றனர்? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.