மதுரை மே 15
மதுரை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், கல்லூரிக் கனவு – 2025 திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் லேடி டோக் பெருமாட்டி கல்லூரியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் நடைபெறும் ‘கல்லூரிக் கனவு’ மாணாக்கர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ. சங்கீதா, குத்துவிளக்
கேற்றி வைத்து உரையாடி, கல்லூரி கனவு குறித்த வழிகாட்டுதல் கையேடுகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா , வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் இந்திரா ,
திறன் மேம்பாட்டு துறை உதவி இயக்குனர் செந்தில்குமார், நான் முதல்வன் நிகழ்ச்சி மேலாளர் உஷாராணி, மதுரை மாவட்ட கல்வி அலுவலர் அசோக் குமார், தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர் , மாநகராட்சி கல்வி அலுவலர் ஜெய்சங்கர் ,
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் சரவணன் முருகன் ,
லேடி டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வர் டாக்டர்.பியூலா ஜெயஸ்ரீ, பல்வேறு துறை
சார்ந்த அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கல்லூரி முதல்வர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.