ஈரோடு பவளத்தான் பாளையம், ஏ ஈ டி பள்ளி வளாகத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பவானி ஆகிய பகுதிகளைச் சார்ந்த தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா கலந்து கொண்டு ஆய்வு பணியை தொடங்கி வைத்து பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார்.
இதில் தனியார் பள்ளிகளில் செயல்படக்கூடிய வாகனங்களில் அரசின் விதிமுறைகளின்படி, வாகனங்களின் பிளாட்பாரம், இருக்கைகள், வேக கட்டுப்பாட்டு கருவி, அவசர கால வழி கதவு, தீயணைப்பு கருவி, படிக்கட்டுகள், முதலுதவி பெட்டி, முதலுதவி உபகரணங்கள், வாகனத்தில் முன், பின் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா, மேலும், பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் இயக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பள்ளி வாகனங்களின் ஆவணங்கள் மற்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சரியாக பராமரிக்கப்பட்ட வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
மேலும் இந்த ஆய்வுகளில் வாகனங்களில் புத்தகப்பை வைக்கும் தனிஇடம், பள்ளி எம்பலம், காவல்துறை, வட்டார போக்கு வரத்து அலுவலர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் தொலைபேசி எண்கள், படிக்கட்டு உயரம், லாக்புக், ஜன்னல் கம்பிகள், ஓட்டுநர் கேபின், கதவுடன் இடதுபக்க வழி உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஈரோடு கிழக்கு மேற்கு மற்றும் பவானி பகுதியில் உள்ள 103 பள்ளிகளைச் சேர்ந்த 1072 வாகனங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது.
குறைகள் உள்ள பள்ளி வாகனங்களை ஒரு வாரத்திற்குள் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்விற்கு கொண்டுவர கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ரவி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பதுவைநாதன் (ஈரோடு மேற்கு மற்றும்ஈரோடு கிழக்கு (பொறுப்பு), மாதவன் (பெருந்துறை), மோட்டர் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார் சுரேஷ்குமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
ஈரோட்டில் 1072 பள்ளி வாகனங்கள் ஆய்வு குறைபாடு உள்ள வாகனங்களை உடனடியாக சரி செய்ய ஆட்சியர் உத்தரவு

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics