கோவை ஜன: 29
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் அவர்கள் கடந்த அக்டோபர் மாதம் தனது கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியும், தொடர்ந்து தமிழகத்தில் நிலவி வரும் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்தும் வருகிறார். அடுத்த கட்டமாக தனது கட்சியில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் முக்கிய பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார்.
அந்த வகையில் கோவை தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக கே. விக்னேஷ் என்பவரை நியமித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் சார்பில் செயலாளர் வரதராஜ், துணைச் செயலாளர்கள் செந்தில், மகேஷ் குமார் செயற்குழு உறுப்பினர்கள் தினேஷ், நாகராஜ், குமார், திருமேனி, தொண்டரணி ராம்குமார், லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினை தெரிவித்தனர்.