கோவை செப்:03
கோவை மாவட்டம் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பூ மார்க்கெட்டில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பூ வியாபாரிகள் தொழில் செய்து வருகிறார்கள்.
சமீபத்தில் இப் பூ மார்க்கெட் அரசு நிதியுடன் புதுப்பிக்கப்பட்டு ஏலம் விடும் தருவாயில் உள்ளது.
மேலும் இந்த பூ மார்க்கெட்டில் இரண்டு வியாபாரிகள் சங்கங்கள் செயல்பட்டு வருவதாகவும், அதில் ஒரு சங்கத்தை சார்ந்தவர்களுக்கே அதிக கடைகளை ஒதுக்க போவதாகவும், தகவல்கள் வெளியாகி கொண்டே வருகிறது.
மேலும் இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரும், கோவை மாநகராட்சி ஆணையாளரும் பூ மார்க்கெட் சங்க நிர்வாகிகளை நேரில் அழைத்து நேர்காணல் செய்து கடந்த 30,40 வருடங்களாக உண்மையாகவும் நேர்மையாகவும் பூ வியாபார தொழில் செய்து வரும் தொழிலாளர்களுக்கு மார்க்கெட்டில் கடை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
ஆனால் சில அரசியல் குறுக்கீடுகள் காரணமாக ஒரு சாராரையே தேர்வு செய்து அவர்களுக்கு கடையை ஒதுக்கி தரப் போவதாக தகவல்கள் பரவிக் கொண்டு வருகிறது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறிவரும் அனைவருக்கும் அனைத்தும் என்பது போல,கோவை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும்,
சிறந்த முறையில் செயல்பட்டு நேர்மையான முறையில் பூ வியாபாரிகளுக்கு கடையை ஒதுக்கி கொடுத்தால் மிகவும் நன்மை பயக்கும் விதமாக அமையும், இல்லையேல் பிற்காலத்தில் பூ மார்க்கெட் வியாபாரிகள் இடையே தேவையில்லாத சண்டை சச்சரவுகள் ஏற்படாத வகையில் ஒழுங்குபடுத்தி கொடுத்தால் பூ மார்க்கெட்டில் நிம்மதியாக தொழில் செய்து பிழைக்க வழிவகை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் கோவை மாவட்ட ஆட்சியர் கோவை மாநகராட்சி ஆணையாளர் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்து வருவதாக தெரிகிறது.
எனவே நேர்மையான முறையில் பூ மார்க்கெட்டில் ஏலம் நடத்தினால் அனைத்து பூ வியாபாரிகளும் நிம்மதி அடைவார்கள் என்பது திண்ணம்.