[1:40 pm, 2/9/2024] +91 90807 28304: தமிழக அரசு, தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடி பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் ஜிகே வாசன்.
சென்னை செப் 03 தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
தமிழக அரசு, ஆசிரியர்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப அவர்களை அழைத்துப்பேசி சுமூகத் தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும்.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக் – Tamil Nadu Elementary Teachers’ Organisation Joint Action Committee (TETO-JAC)) அமைப்பின் சார்பில் அரசாணை 243-ஐ ரத்து செய்திட வேண்டும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் ஊதிய முரண்பாடுகளைக் களைந்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த 2023-ல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் டிட்டோஜாக் அமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்ட 12 கோரிக்கைகளின் மீது உடனடியாக ஆணைகள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 31 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இன்னும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
எனவே டிட்டோஜாக் சார்பில் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திலும், செப்டம்பர் 29, 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் நடைபெறும் கோட்டை முற்றுகைப் போராட்டத்திலும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முழுமையாகப் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் ஒவ்வொரு நாளும் மாவட்ட வாரியாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
எனவே தமிழக அரசு ஆசிரியர்களை போராட்டக் களத்திற்கு தள்ளுவதற்கு பதிலாக அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற, தேர்தல் நேர வாக்குறுதியை கவனத்தில் கொண்டு, உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
[1:40 pm, 2/9/2024] +91 90807 28304: