மதுரை ஜனவரி 18,
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் ஒரு வயது குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய ஊக்கை 2 மணிநேரத்தில் அகற்றி மாபெரும் சாதனை
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கடந்த 13.01.2025 அன்று ஒரு வயது பெண் குழந்தை சுமார் ஏழு நாட்களாக தொடர் இருமல் மற்றும் காய்ச்சலுக்காக உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அக்குழந்தையின் பெற்றோர் குழந்தை எந்த பொருளையும் விழுங்க வில்லை என்றனர். அக்குழந்தையின் எக்ஸ்ரே மற்றும் சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் ஊக்கு மாதிரியான புறப்பொருள் (Foreign Body) மூச்சுக் குழாயின் இடது புறத்தில் கண்டறியப்பட்டது. அரசு இராசாசி மருத்துவமனையின் மயக்க வியல் துறை இயக்குநர் பேராசிரியர். மரு.கல்யாணசுந்தரம் தலைமையிலான மயக்க வியல் மருத்துவ குழு மற்றும் நெஞ்சக நோய் மருத்துவ துறைத் தலைவர் பேராசிரியர் மரு.பிரபாகரன் மற்றும் குழந்தைகள் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் பேராசிரியர் மரு.மீனாட்சி சுந்தரி உள்ளிட்ட மருத்துவ குழுவினர்கள் 16.01.2025 அன்று மூச்சு குழாய் உள்நோக்கி பரிசோதனை கருவி கொண்டு பரிசோதித்ததில் LED ல் இருப்பது கண்டறியப்பட்டு சுமார் இரண்டு மணி நேர தீவிர முயற்சிக்குப் பின் வெற்றிகரமாக நீக்கப்பட்டது. இந்த சிகிச்சைக்குப் பிந்தைய தீவிர மருத்துவ கண்காணிப்பில் குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளது