மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2025-2026 ஆம் ஆண்டு கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழாவில் பங்குபெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக கோடைகால பயிற்சி முகாம் கடந்;த ஏப்ரல் மாதம் 25-04-2025 வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி 15-05-2025 வியாழன்கிழமை வரை 21 நாட்கள் சாய் விளையாட்டரங்கம் ராஜன்தோட்டத்தில் நடைப்பெற்றது.
இதில் தடகளம், கால்பந்து, கையுந்துப்பந்து, ஜுடோ, பளுதூக்குதல் மற்றும் கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். இந்த கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்கள் ளுனுயுவு விளையாட்டு விடுதியில் மற்றும் ளுனுயுவு ளுவயச யுஉயனநஅல ஜுN;டா விளையாட்டு ஒரு சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக அரசால் வழங்கப்படும் சலுகைகளுடன் பயிற்சிப் பெறுவர்.
அதன்படி, இன்று இந்த கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோடைகால பயிற்சி முகாமில் பங்குபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் முனைவர் எஸ்.உமாசங்கர், பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவியர்கள் கலந்துகொண்டனர்.