தருமபுரி அஞ்சல் பிரிப்பகம் கடந்த 1982 முதல் சுமார் 42 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.தருமபுரி அஞ்சல் பிரிப்பு அலுவலகத்தில் சுமார் 25 நிரந்தர ஊழியர்களும், 10 தற்காலிக ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
தருமபுரி அஞ்சல் பிரிப்பகத்தில் மாலை 5:30 முதல் 8:30 வரை பதிவுத்தபால்,விரைவுத்தபால், பார்சல் தபால் சேவைகளை வணிகர்கள், பொதுமக்கள், வழக்கறிஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தினந்தோறும் 2500 பதிவு தபால்கள், மற்றும் 20,000க்கும் மேற்பட்ட சாதாரண தபால்கள் மற்றும் 400 மேற்பட்ட பார்சல்களை கையாண்டு வருகிறது.
அஞ்சல் நிர்வாகம் கடந்து 5.12.2024 அன்று தருமபுரி அஞ்சல் பிரிப்பகத்தை சேலம் அஞ்சல் பிரிப்பகத்துடன் இணைக்கும் உத்தரவினை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் பொதுமக்கள், வணிகர்கள், வழக்கறிஞர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். சேலம் அஞ்சல் பிரிப்பகத்துடன் இணைப்பதன் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கும் தபால்கள் காலதாமதமாக கிடைக்கும்.
எனவே தருமபுரி அஞ்சல் பிரிப்பகத்தை சேலம் அஞ்சல் பிரிப்பகத்துடன் இணைக்கும் உத்திரவினை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் பெ. சுப்பிரமணி தலைமை வகித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர். சிசுபாலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். கலை செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் த. கு. பாண்டியன், சாக்கன்சர்மா, மதிமுக மாவட்ட செயலாளர் ராமதாஸ், வணிகர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியலிங்கம்,இஸ்லாமிய கூட்டமைப்பு மாவட்ட தலைவர் என். சுபேதார், அகில இந்திய அஞ்சல் ஆர் .எம். எஸ். ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பி. சுப்பிரமணியம், மாவட்ட உதவித் தலைவர்கள் கணேசன் , நடராஜன், மாநில நிர்வாகிகள் பி. சங்கு, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் அனைத்து கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.