சுசீந்திரம் இந்து அறநிலையத்துறை அலுவலகம் முன்பு கன்னியாகுமரி மாவட்ட கோவில் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் தங்களுக்கு மிகக் குறைந்த அளவு சம்பளம் வழங்குவதால் தங்களது குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே தங்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஊதிய நிர்ணய குழுவின் பரிந்துரை1998 அரசாணை என் 257- படி சம்பளத்தை நிர்ணயம் செய்து உயர்த்தி வழங்க வேண்டும் என தங்களது குடும்பத்தோடு கடந்த 10 நாட்களாக இரவு பகலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் இது குறித்து சங்க தலைவர் ராமச்சந்திரன் மற்றும் சங்கச் செயலாளர் அஜி குமார் நிருபர்களிடம் கூறும் போது குமரி மாவட்ட இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான கோயில்களில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் தற்போது 352 பேர்கள் மட்டுமே முழுநேர உள்துறை ஊழியர்களாக உள்ளனர் இவர்களுக்கு 30 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும் 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது மற்றவர்களுக்கு 5000 மற்றும் 6000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது, நாங்கள் எங்கள் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு தற்சமயம் வழங்கும் சம்பளம் போதாது எனவே அரசு ஆணைப்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும் என நியாயமான கோரிக்கை வைத்து எங்கள் மனைவி குழந்தைகளோடு குடும்பமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றோம் இந்த போராட்டத்திற்கு பல அமைப்புகளும் பல கட்சி நிர்வாகிகளும் வந்து ஆதரவு வழங்கி வருகின்றனர் எனினும் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மெத்தன போக்கோடு நடந்து வருகின்றனர் எனவே இந்த போராட்டத்தை தீவிர படுத்த வேண்டும் என சி ஐ டி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் நாளை 5ம் தேதி மாபெரும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார் நாங்கள் பல கட்ட போராட்டங்களில் நேற்று குமாரகோவில் திருவட்டார் கோவில் ஆகிய கோவில்களில் வழக்கத்தை விட முன்பாகவே கோயில் பூஜைகள் செய்துவிட்டு கோயில் நடை பூட்டிவிட்டு சென்ற போராட்டம் நடைபெற்றது மேலும் பல கோயில்களில் பூஜை நேரங்களில் மேளம் நாதஸ்வர இசை கலைஞர்கள் செல்லவில்லை இதனால் வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் சென்று உள்ளனர் ஏற்கனவே நீதிமன்றமும் எங்கள் நியாயமான சம்பள உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது எனவே அரசு இதில் தலையிட்டு எங்கள் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என தெரிவித்தார்
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோவில் ஊழியர்களுக்கு ஆதரவாக சிஐடியு நாளை மாபெரும் மறியல் போராட்டம் அறிவிப்பு

Leave a comment