நிலக்கோட்டை
அக் 04
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை
அருகே கொடைரோடு ரயில்வே நிலையம் எதிரே சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நகை அடகு கடை
நடத்தி உள்ளார்.
மேற்படி கடையில் நகை அடகு வைத்தால் குறைந்த வட்டியில் பணம் தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்துள்ளார். இதனை நம்பி திண்டுக்கல் மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 400 க்கும் மேற்பட்டோர் 300 சவரன் நகைகளை இந்த அடகு கடையில் வைத்துள்ளனர்.
இதில் சிலர் தங்கள் நகையை மீட்க செல்லும் போது கடையை
கடந்த 6 மாதமாக திறக்காமல் பூட்டிய நிலையில் உள்ளதாக கிடைத்த தகவல் அறிந்து அதிர்ச்சியுற்ற பொதுமக்கள் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கடந்த சில நாட்களாக உரிமையாளரை தேடி வந்த நிலையில் நேற்றிரவு சேலத்தில் அவரை கைது செய்து அடகு கடைக்கு அழைத்து வந்த காவல்துறையினர். வாடிக்கையாளர்களுக்கு அடகு நகைகளை திருப்பிக் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.
ஆனால் நகைகளை அடகு வைத்தவர்களுக்கு நகைகளை கொடுக்காமல் குறைந்தளவு பணம் மட்டும் கொடுப்பதாக கூறிய நிலையில் ஆத்திரமுற்ற பொது மக்கள் கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கடை உரிமையாளர் வெங்கடாசலத்தை காவல் நிலையம் கொண்டு சென்றனர். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.