நாகர்கோவில், ஜூன் 27
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணி யாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீடப்பிள்ளைகள். பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்தவ அனாதை இல்ல பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநல வாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பப் படிவங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடம் இருந்து சான் றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இவர்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். இந்த நலவாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.