இந்நிகழ்வை பிளிசிங் சர்ச் தலைமை போதகர் ஜெபராஜ் முத்தையா தலைமையில் தமிழ்நாடு பிரஸ் கிளப் மாவட்ட செயலாளர் ரூபன்ராஜ் முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகள் தலைவர் முருகேஷன், ஆலோசகர் ராமசுப்பிமணியன், துணை செயலாளர் ஆத்தியப்பன், நெல்லை மண்டல செயலாளர் வசந்த் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு பிரஸ் கிளப்” ன் மாநில பொருளாளர் புதியசெல்வம் கலந்து கொண்டு ஏழை எளியோர்களுக்கு அரிசி பைகள், புத்தாடைகள், உணவுகள் சுமார் 200 நபர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியே சிறப்பாக ஏற்பாடு செய்த பிளசிங் சர்ச் தலைமை போதகர் ஜெபராஜ் முத்தையா மற்றும் தமிழ்நாடு பிரஸ் கிளப் மாவட்ட செயலாளர் ரூபன்ராஜ் ஆகியோர்க்கு பொதுமக்கள் சார்பாகவும், பத்திரிகையாளர்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
மதிய விருந்துடன் கிருஸ்துமஸ் விழா இனிதே நிறைவுற்றது.