நாகர்கோவில் – நவ- 06,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரிடம் கிறிஸ்தவ உபதேசியர் மற்றும் தேவாலய பணியாளர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்கிட கேட்டு மனு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:
தமிழக அரசினுடைய கிருஸ்தவ நல வாரியத்தில் தமிழக அமைப்பு சார்பாக தமிழக அனைத்து சிறுபாண்மை கிருஸ்தவ முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நாகர்கோவிலில் உள்ள பெந்தேகோஸ்தே , சுயாதின போதகர்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் வழங்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்டு நலவாரியத்தின் உதவிகள் பெற்று தருவதாக உறுதியளித்துள்ளார்கள் இது குறித்து தமிழக அரசிற்க்கும் , கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கும், சிறுபாண்மை நலத்துறை அதிகாரிகளுக்கும் எங்களுடைய அமைப்பு சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். எங்களது கோரிக்கைகள் கல்லறை தோட்டம், இடம், வீடு கட்ட நல உதவிகள் மேலும் சிறுபாண்மை துறை என்னென்ன நல உதவிகள் உள்ளதோ அனைத்தும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என தென்னிந்திய பெந்தெகொஸ்தே மற்றும் சுயாதீன திருச்சபைகள் பேராய சட்ட ஆலோசகரும் மாநில பொதுசெயலாளர் டாக்டர். ஜோசப் தமிழ்மாறன் கூறினார்.