மதுரை செப்டம்பர் 2,
மதுரை மாவட்டம் குலமங்கலத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் தமிழ்நாடு மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையுடன் இணைந்து கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்புரை வழங்கினார், இதில் சிறப்பு விருந்தினராக கால்நடை மருத்துவர் செந்தில் பாய் தலைமை வகித்தார். விலங்குகளை பார்வையிட்டு மருந்துகளும் வழங்கினார். குலமங்கலம் பஞ்சாயத்து தலைவர் ராணி ராஜாராம் நிகழ்ச்சியின் இறுதியாக நன்றியுரை வழங்கினார்.