மதுரை அக்டோபர் 27,
மதுரை செல்லூரில் சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை இணைந்து கால்நடை மருத்துவ முகாம்
நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் மதுரை மாவட்ட சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளரான கால்நடை மருத்துவர் டாக்டர் சத்யபிரியா கால்நடைகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்றும், தற்போது இருக்கும் மழைக்காலத்தில் நாம் கால்நடைகளை பராமரிக்கும் வழிமுறைகள் குறித்தும், பாதுகாப்பு நெறிகள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் கால்நடைகளுக்கு சத்து மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டது. முகாமில் 115 கால்நடைகள் பயன் பெற்றன. நிகழ்ச்சியின் இறுதியாக செல்வி livestock நன்றியுரை வழங்கினார்.