திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அமுதா மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் விக்டோரியா ஆகியோர் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய சரகம் பொன்னகரம் ராமா பிரபா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும் குழந்தைகளின் திருமண வயது பற்றியும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு பற்றியும் போக்சோ சட்டத்தை பற்றியும் இணைய வழி குற்றங்கள் பற்றியும் இலவச தொலைபேசி எண்கள் 1098,181,1930 பற்றி விழிப்புணர்வு வழங்கப்பட்டது.



