தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்ச்சியை அரியலூர் மாவட்டத்தில் முதல்வர் துவக்கி வைத்ததை தொடர்ந்து தருமபுரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி அவர்கள் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். உடன் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஸ்வரன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



