கிருஷ்ணகிரி,ஜுலை.24-கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் புளியம்பட்டி, போச்சம்பள்ளி, வலசகவுண்டனூர் ஆகிய கிராமங்களில் மக்களுடன் முதல்வர் திட்டம் புளியம்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆர். ரங்கநாதன், போச்சம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தமூர்த்தி, வலகவுண்டனூர் ஊராட்சி மன்ற தலைவர் அரிமா ஜெயவேல் ஆகியோர் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் எம் எல் ஏ கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.பீலா வெங்கடேசன், மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எம்.சரயு ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். உதவி இயக்குனர் (ஊராச்சிகள்) பி.மகாதேவன், நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) என்.ராமஜெயம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இரா. கலா, இரா.துரைசாமி உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் முக்கனி முத்து, எம்.சிவசங்கரன், எஸ்.ரஞ்சித்குமார் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.



